தேட வைக்கும் காதல்..!

எல்லா பேருந்து பயணத்திலும்
எனக்கென்ன என்று
என் தோள் சாய்ந்து விட்டு
நீ சென்று விடுகிறாய்..

நீ போன பின்னும்
அந்த சுமை கேட்கும்
என் தோள்களுக்கு
நான் என்ன சொல்வேன்..

உன்னை உரசிய ஸ்பரிசம் தேடி
என் உறக்கத்தை கலைக்கும்
உள் உணர்வுகளை எப்படி அள்ளி முடிப்பேன்..

எல்லாம் என்னில் இருந்த போது
காதல் மட்டும் தேடினேன்..

காதல் கிடைத்தபின்
தொலைக்க முடியாததை கூட
தேடித் தவிக்கிறேன்....

எழுதியவர் : kavithayini (13-May-13, 11:04 pm)
பார்வை : 145

மேலே