உலகை யியக்க எழுகவே!
வெட்ட வெட்ட துளிரும் இலையாய்
நம்பிக்கை நம்மி லிருக்க புதுக்
கல்வி குருதி பாய்ந்தோட இன்னும்
கலக்கம் ஏன் தோழா!
ஓடி யாடுமிள பருவ வுள்ளம்
வாடி வதங்கி போகலாகுமோ – இளமை
பாய்ந்தோடும் புது வெள்ளம் அஃது
விதியெண்ணி விசனப்பட்டு அழலாகுமோ?
அஞ்சும், வலி எப்போதும் அஞ்சும்
தாங்கும் மனிதர் கண்டு - வாழ்வில்
வலியில்லா வெற்றி வரவு பெற்ற
மனிதரி ங்குண்டோ இளைஞா?
பகையாய் சாராயம் பாய் விரிக்க
புகைபிடித்த வாய் புற்றுபிடித்து விழ- உடல்
உறுப்புக்கள் இயக்கம் ஓர் அதிசயம்
அதனியக்கம் தடை செய்யலாகுமோ!
விழாத நீர் அருவி யல்ல
ஓடா நீர் ஆறு அல்ல
இயக்கம், செய லாக்கமே இளமையாக
எழுவாயா வுலகை யியக்க!
நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்