பாலியல் கொடுமை
தீவிரவாதத்திற்கு உடன் போனால்
தூக்கு தண்டனை - ஒப்புக்கொள்கிறேன்
பச்சிளம் குழந்தையை பாலியல்
கொடுமைப் படுத்தினால்
என்ன தண்டனை என்று இன்னும்
தீர்மானிக்க முடியாமல் திணறுகிறது
நம் இந்திய அரசு.
தன்னையே புரிந்து கொள்ளத்தெரியாத
சிறு மலரை சேதப் படுதியவனை
இன்னுமா விட்டு வைப்பது ?
குற்றவாளியை பிடித்து விட்டார்களாம்
காவல் நிலையத்தில் வைத்து
விசாரிப்பாம்.
நடந்த கொடுமையை நாடே
அறிந்த பிறகு விசாரணை என்ற
சம்பிரதாயம் எதற்கு ?
அனைத்து அரசியல்வாதிகளும்
ஒன்று சேர்ந்து விரைவாக,
அதிக பட்சம் ஒரே நாளில்
ஒரு பலமிக்க சட்டத்தை
கொண்டு வரமுடியாதா ?
மூன்று மாதத்திற்கு முன்னாள் தான்
ஒரு சகோதரியை கொடுமையான
முறையில் பறிகொடுத்து விட்டோமே.
நடந்த சம்பவத்தை மையமாக
வைத்து தொலைக்காட்சியில்
விவாதம் வேறு ?
விவாதத்ததில் நடப்பது என்ன ?
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லுவது
மற்றவர் மறுப்பது.
எந்த ஒரு திடமான முடிவும் இல்லாமல்
விவாதம் முடிந்து விடும்.
இதனால் யாருக்கு என்ன பலன், பயன் ?
அந்த கொடூரமான கொடுமையை
செய்தவர்கள் (ஒருவனை தவிர)
மற்றவர்கள் சிறையில் இருக்கிறார்கள்
அவள் இறந்து விட்டாள்,
இவர்கள் இன்னும் உயிரோடு தான்
இருக்கிறார்கள்.
இதனால் நாம் மக்களுக்கும்,
உலகத்திற்கும் ஒரு முன்
உதாரணமாக திகழ்ந்து கொண்டு
இருக்கிறோம்
"எங்கள் நாட்டில் கொடுமைகள்,
வன்முறைகள், எல்லாம் சர்வ சாதாரணம் –
ஆனால்
தண்டனை என்பது மிக அபூர்வம்".
இன்னும் எத்தனை குழந்தைகளையும்
சகோதரிகளையும் இது போன்று பலி
கொடுக்க வேண்டுமோ ?
நம் அரசாங்கம் கடுமையான
சட்டம் கொண்டு வரும் வரை ?