சிலுவை சுமக்கிறேன் காதலில் ....

சிறகு சுமையாகுமா
கைகள் விறகாகுமா
சிலுவை சுமக்கிறேன்
காதலில் நானம்மா

நேசம் விஷமானதே
சுவாசம் வெறுத்துபோகுதே
கவிதை என்னை சுட்டதே
நான் ஊமையாகினேன்

மனதை புரிந்து கொண்டு
காதல் செய்ய தொடங்கு
இல்லை காதல் உன்னை ஆளும்
மிஞ்சாது உன்னில் எந்த தூளும்

மரணம்வரையில் அவள் நேசம்
தொடரும் என்று நினைத்த எனக்கு
அவள் நினைவால் மரணம் வரும் என்று
நினைக்க வில்லையே

காதல் சதி தொல்லையே ..........

எழுதியவர் : ருத்ரன் (15-May-13, 7:56 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 72

மேலே