நினைவுகளோடு வாழ்பவர்கள்

சேஷா...
சேஷாவை தீவிர MGR ரசிகன் எனலாம்
விறகு பிளப்பவன் எனலாம்
பிளாஸ்டிக் பை பொறுப்பவன் எனலாம்
கொடும்பாவி இழுப்பவன் எனலாம்
என்னை பொறுத்தவரையில்
சேஷா கள்ளம் கபடமில்லாமல் பேசும்
ஊரின் ஒரே பிரஜை என்பேன் .

எது நடந்தாலும் MGR இருந்திருந்தால்
இப்படியெல்லாம் நடந்திருக்காது என்பான்
சேஷாவின் அண்ணன் மகன் ஒருவன் காவல்துறையில் பணிபுரிகிறான்
ஒரு அண்ணன் அகமதாபாத்தில் இருக்கிறார்
ஒரு அண்ணன் ஊரிலேயே இருக்கிறார்.

பல திரையரங்கங்கள் திருமனமண்டபமாக
மாற்றப்பட்டதில்
MGR படம்பார்க்க முடியாமல்
பேப்பர் பார்ப்பவர்களிடம்
எந்த தொலைக்காட்சியிலாவது
MGR படம் உண்டா என விசாரிப்பதையே
வழக்கமாய் கொண்டிருந்தான் .

வயது 50 தொட போகும்
சேஷாவை சின்ன குழந்தைகளும்
பெயர்சொல்லியே அழைப்பார்கள்

எல்லோரும் கைகழுவிய பிறகும்
தனிமரமாய் பேப்பர் பொறுக்கி
MGR படம் பார்த்து கலகலப்பாய் பேசும்
சேஷா .
ஊர் பெரிய மனிதர்களைக்காட்டிலும்
முக்கியமானவராய்
படுகிறார்

உங்களூரிலும்
இருக்கலாம் செஷாவோ
சேஷாவை போன்றோரோ...

எழுதியவர் : இதயதுல்லா (15-May-13, 7:54 pm)
பார்வை : 73

மேலே