தவறும்... தப்பும்....

கோபி: என்ன சுந்தர் காதுல கட்டு போட்டிருக்க?

சுந்தர்: அது ஒரு மானங்கெட்ட கத கோபி

கோபி: அப்படி என்னப்பா எங்கிட்ட சொல்ல முடியாத கத...

சுந்தர்: அது ஒன்னும் இல்லப்பா நேத்து IPL மேட்ச் பாத்துகிட்டு இருந்தப்போ என் பொண்டாட்டி அயன் பண்ணிட்டு இருந்தவ அயன் பாக்ஸ்சை அப்படியே வச்சிட்டு அடுப்படிக்கு போய்ட்டா அந்த நேரம் பாத்து லேன்ட் லைன் போன் ட்ரிங்! ட்ரிங்! னு கத்த மேட்ச் பாத்த ஜோர்ல அப்படியே எடுத்து காதுல வச்சிட்டேன் போனுக்கு பதிலா அயன் பாக்ஸ் அதான் இந்த கூத்து.......

கோபி: அதுக்கு ரெண்டு காதுலயும் ஏன்யா கட்டு போட்டிருக்க

சுந்தர்: மறுபடியும் அதே போனு ட்ரிங்! ட்ரிங்!
-னுச்சி........ ............... ................ ..........

கோபி: !!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : aanaa (16-May-13, 9:38 pm)
சேர்த்தது : aanaa
பார்வை : 595

மேலே