மாறுமா வேஷம்

சுடுமணல் தேசமிது
பணம் தேடி பயணமிது

இக்கரையில் சொந்தமிது
அக்கரையில் கனவிது

விடை தேடி தூரதேசம்
விடியாத கனவை சுமந்து

அடிமையாய் வாழ்கை இது
தினம் பொழுது தொடர்ந்திடுது

பொறுமையாய் பொதி சுமந்து
இளமையும் கடந்திடும்

சொந்தமில்லை ஆறுதலுக்கு
செத்த கனவை அரவணைத்து

இரவுகளும் கடந்து செல்லும்
உறங்காத வேதனை கொண்டு

எதிர்பார்ப்பு சொந்த மண்ணில்
முழு வேலை கஞ்சி இல்லை

ஒட்டிய வயரும் காத்திருக்கும்
சொந்த மண்ணில் எதிர் பார்த்து

கிடைக்கும் காசை அனுப்பி
ஆறுதல் படும் அரை மனது

வருடங்கள் உருண்டோடும்
வயோதிகமும் வரவேற்கும்

இன்னும் தீரவில்லை கஷ்டம்
என்றுதான் நிறைவேறும் திட்டம்

மனதில் ஆயிரம் கேள்விகளுடன்
மாறுமா எங்கள் வேஷம் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (17-May-13, 6:44 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 152

மேலே