ஒடிடும் நதியாய் நீ இரு..!
ஒடிடும் நதியாய் நீ இரு..!
---------------------------------------
தேசிய நெடுஞ்சாலை-
இருந்தும்.......
பொதிசுமந்து செல்லும் கழுதைகளாய்,
நாம் வரப்புகளோடு
நம் பயணத்தை தொடர்ந்து
கொண்டு இருக்கிறோம்.
அஞ்சனப் பெட்டியில்,
அறுசுவை கூட்டும்,
பொருள்கள் இருந்தும்,
அதனுள் அமிர்தம் என்னும்
உப்பை வைக்க தவறிவிட்டோம்,
இருப்பினும், உழைப்பவரின்
வியர்வைத்துளிகளே...
உப்பாகும், காரணத்தால்.,
''உழைக்காமல் எதையும்
உணர்ந்து கொள்ள முடியாது''
பாதை உள்ளது.என்பதற்காக,
பயணித்துத்தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயமில்லை'
தோழனே..!
ஏதாவது, ஓர் இலக்கு வேண்டும்
அதை நாடி உன் பயணம்
தொடர வேண்டும்.
எதுவுமே ஓர் கால நிர்ணயம் தேவை
நிர்ணயம் இல்லாத செயல்
நிர்மூலம் ஆகிவிடும்
காலத்தோடு மாறும் பருவங்கள் போன்று
உன் செயலில் திசை நான்கும் நல்
ஒளி பெற வேண்டும்.
ஓடிடும் நதியாய்
நீ இருந்தாலும் இடையில்
தடுப்பனை கட்டும்
முதியோர் கருத்துக்களில்
தலை வணங்கிச்செல்
கடலில் சங்கமித்துப் பின்
கரை நோக்கும் உனக்கு
ஆரத்தி தட்டுகளோடு
அணிவகுத்து நிற்கும்
காட்சிதனை...! காண்பாய்..!