காகம்
![](https://eluthu.com/images/loading.gif)
இதைப் பற்றி கவிஞர்கள்
கவிதைகள் பல எழுதி
இருக்கிறார்கள்.
காகம் கத்துவதை ஒற்றுமையின்
எடுத்துக்காட்டு என்றும்,
தனக்கு உணவு கிடைக்காததால்
போடும் கூச்சல் என்றும்.
மேலும் இது நம் வீட்டு
முற்றத்தில் கத்தினால்
உறவினர் வருகை நிச்சயம்
என்று கணிப்போரும் உண்டு.
ஆனால் கத்தவே முடியாமல்
கத்தினாலும் சத்தம் வெளியே
வராமலும் இருக்கும் காகத்தை
நீங்கள் பார்த்ததுண்டா ?
நான் பார்த்தேன், அந்த
மாலைப் பொழுதில்,
காக்கைகள் கூட்டத்தில் இருந்து
விலகி தனியாக அமர்ந்து முடிந்த
அளவு விடாமல் கத்தப் பார்த்து
தோற்றுப்போய் மீண்டும் மீண்டும்
முயற்சி செய்து கொண்டு....
எனக்கு தெரிந்தது அதனால்
கத்த முடியவில்லை என்று.
ஆனால் அது இப்படி நினைத்துக்
கொண்டு இருக்குமோ ,
நான் கத்தாமல் இருந்தால் என்னை
பார்ப்பவர்களுக்கு என் மேல் இரக்கம்
வரலாம், அதனால் நாமும் கத்துவது
போல் பாவனை செய்யலாம்.
அல்லது
முயற்சி செய்து கொண்டே இருப்போம்,
ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும் .
இவை எதுவும் இல்லமால்
உண்மையாகவே மனதால்
அழுது கொண்டு ஆண்டவனிடம்
பிரார்த்தனை பண்ணுகிறதோ....
இருக்கலாம்
அதனுடன் சேர்ந்து
நானும்
ஆண்டவனை வேண்டுகிறேன்
உடனே கூடிய விரைவில்
அதற்கு பேசும் / கத்தும்
சக்தியை கொடு .
நீங்கள் ......!!!!!!