விலை மதிப்புடைய ஒழுக்கமிலா கல்வி.
நுணலுந் தன்வாயால் கெடுவதைப் போலே
நுவலுவரு மானத்தை யறிந்திடு மாக்கள்
துவலையைத் தனிவழித் தலையினிற் போர்த்தி
கவலையிற் காணா தொழியச் செய்திடுவார்.
வழியெதுவும் பிறிதில்லை யென் றெண்ணியே
அழிவிலா செல்வத்துட் செல்வமாம் கல்வியை
முழுவியே முசுண்டரும் முடங்கியே படைத்திட
முயக்குமே யவர் முண்டிதம் செய்பாங்கு.
பிள்ளைகள் படித்திடப் பழனமும் பாழாகும்
வெள்ளியும் பொன்னும் வட்டிக்கு வீணாகும்
பள்ளமாய் வாழ்வின் ஆதாரமே வீழும்
கள்ளரவர் வாழ்ந்திடக் காரிகமே மிஞ்சும்
ஒழுக்கமதை ஒத்தாங்கு செய்திடா கல்வி
வழுக்குதனை வாரிவழங்கிடும் வழியாகும்
பழுப்புதனைப் பூசியே பட்டம்பல பெறினும்
கழு்நிலத்திற் குதவா களமாகும் வாழ்வு.
மனம்போன போக்கினி லினிது வாழ்வதே
சினம்கொண்ட இளைஞர்தம் வாழ்க்கையென்று
இனங்காட்டித் தி்ரைப்படங்கள் படி்ப்பித்தின்று
வனமாகிப் போனது நல்வாழ்வின் வழியே