நாட்காட்டியின் நக்கல்
புது வருடம் ..புது உருவம்
புத்துணர்சியுடன் புது அவதாரம்
மடிந்தாலும் மலர்வேன்
புத்தம்புது பூவாக ......
என்னை படைப்பவனுக்கும்
என்னை கிழிப்பவனுக்கும்
நான் விடுக்கும் சாபம்
அவன் வாழ்நாளில் இந்நாள்
மீண்டும் வராமல் போவதென்று ......
என்னை கிழித்து
காயப்படுத்துடும் போதெல்லாம்
நீ சந்தோஷ படுவாய்
அப்படா சம்பளம் வாங்க
இன்னும் பத்து கிழிச்சா
போதுமுன்னு ............
ஆனால் நானோ அப்படா
என்னை கிழித்தவனின் ஆயுளில்
ஒருநாளை நான் கழித்துவிட்டேன்
என்று கூச்சலிடுவேன்.................
ஒவ்வொரு நாளும்
நல்ல நாளா என்று
பார்க்கவே என்னை
கிழிக்கிறார்கள் .....
அடுத்தவரை காயப்படுத்தி
சந்தோஷம் அடைபவர்கள்
மனித ஜந்துக்களாய் மட்டுமே
இருக்க முடியும் ....
என்னை கிழிக்கும் மானிடனே!
உனக்கு ஒரு சவால்
என்போல் உன்னால்
வருடம் ஒரு முறை
புத்துணர்வுடன் புது
அவதாரம் எடுக்கமுடியுமா ??
எங்களுள் எந்த வேற்றுமையும்
உங்கள் போல் இருந்ததில்லை
பொறாமைக்கு அகராதி கொண்டு
அலையும் மனிதா........
வெற்றி தோல்வி என்பது
எங்களுள் இல்லை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
விட்டுக் கொடுத்து பகிர்ந்து
வாழ்கிறோம் எங்கள் வாழ்நாளை ...
என்னை கிழித்து விட்டதால் நீ
ஒன்றும் மாமனிதன் இல்லை
நீ என்னை கிழிக்கா விட்டாலும்
என்னைநான் உதிர்த்து
புது உலகம் காண விழைவேன்....
வீழ்ந்து கிடக்கமாட்டேன்
விதி என்று உன்போல் புலம்பி ....
நீ ஓடுவது தெரிகிறது ..
இன்று நீ கிழிக்க மறந்த - உன்
வாழ்நாளை கழிக்க மறந்த
என்னை கிழிக்க..................