மாமாவுக்கு ஒரு மடல்
தாய் மாமன் உறவு ஓன்று
வாழ்நாள் பிணைப்பு அது
அரபு நாட்டு விசா தந்து - எனக்கு
உரிமையோடு பொறுப்பும் உண்டு
திறமையாக கடையை நடத்தி - நான்
பெருமை சேர்த்தேன் உங்களுக்கு
வருத்தம் வரும் சில நேரம் - இன்னும்
பொறுத்து கொள்ளும் மனது மட்டும்
விருப்பமில்லா செயல் ஒன்றை கூட
உங்களை மீறி செய்ததில்லை
கற்ற தொழில் கடையில் பெற்ற அனுபவம்
வாழ்கையில் கற்று கொண்ட பாடம்
உங்கள் சுக குறைவு ஒரு மன கஷ்டம்-என்
எதிர் காலம் முடிவு எடுக்கும் நேரமிது
வருத்தம் ஒன்றும் உங்கள் மீது இல்லை
சந்தோசமாக நான் விலகி கொண்டேன்
இன்னும் சிறப்பாக உங்கள் கடை நடக்க
துவா செய்கிறேன் வல்லோன்னிடத்தில்
மன வருத்தம் என் மீது இருந்தால்
மறந்திடுங்கள் அந்த அல்லாஹுவுக்காக
உங்கள் மருமகன் இந்த மடலை - நான்
சலாம் கூறி நிறைவு செய்கிறேன்
புகழனைத்தும் இறைவனுக்கே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
