மண வாழ்த்து மடல் !

மண வாழ்வு காண வரும் ஜோடி
மறை தந்த வழிமுறையை நாடி

குணமாக வாழ்ந்திடனும் நீங்கள்
நம் நபி நாதர் பாதையிலே என்றும்

எம் பெருமானார் வாழ்ந்து சென்ற பாதை
எளிமையோடு கடைபிடித்து வாழ்வீர்

பொறுமையுடன் சிக்கனமும் கூடி என்றும்
ஏற்றம் தரும் வாழ்வுதான் சிறப்பு

இன் முகம் கொண்டு உபசரிப்பில் கலந்து
இல்லத்தாரிடம் ஏற்படுத்தும் பண்பு

ஐ வேலை கடமைகளில் ஓன்று - அதை
நேரத்துடன் நிறைவேற்றுங்கள் நின்று

மாதங்களில் புனிதமான ரமலான் -அந்த
மாசற்ற நோன்பினை நிறைவேற்று

நன்மக்கள் பேரு பெற்று என்றும்
நலமாய் வாழ்ந்திடனும் நீங்கள்

இரு கரம் ஏந்தி கேட்கின்றேன் இறைவா
மணமக்களுக்கு உன் நிறைவருளை தருவாய் !

வாழ்த்தும் நெஞ்சம் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (21-May-13, 2:54 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 118

மேலே