காதல் தோற்கின்

மெய்யான காதல்
பொய்யான போது
உலகமே மறக்கும்
உயிரை வெறுக்கும் .............

உருண்டு உருண்டு
படுத்தால் கூட
தூக்கம் வராது
துன்பம் மாறாது ..........

இறுக கண் மூடி
உருக வேண்டினால் கூட
நினைவு அது தூங்காது
நினைத்தவளை மறக்காது ..........

சிரிப்பு செத்துபோகும்
வெறுப்பு விழித்துக்கொள்ளும்
சாபமாய் தோன்றும் உலக வாழ்க்கை
மெல்ல கழியும் ஒவ்வொரு நொடியும் ........

வெளியில்தெரியா துன்பமது
நெஞ்சில் பட்ட காயமது
ஆறுவதற்கு நாளாகும்
தேறுவதற்கு வருடங்களாகும் ..............

மாது அவளை மறப்பதற்கு
மது கோப்பை துணையாகும்
அவள் நினைவை மறப்பதற்குள்
சுய நினைவை இழந்துபோகும் .......

நினைத்து நினைத்து
புகைத்து புகைத்து
உயிரை வதைத்து
உடல் ஓர் நாள் இளைத்து போகும் .............

உடல் சாகும் உயிர் சாகும்
நினைவு மட்டும் சாகாமல்
காத்திருக்கும் அவள் நினைவில்
கடைசிவரை கல்லறையிலும் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (23-May-13, 1:03 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 134

மேலே