தினம் தினம் மனமகிழ்ச்சிக்கு..
வெள்ளி மலர்ந்து மனதில்
மகிழ்ச்சியின் வாசம் வீசிச்செல்லும்..
சனியோடு துன்பங்களை தொலைத்து
ஞாயிறு மடியில் வீழ்கின்றோம்..
ஆசையோடு பேச அன்போடு உறவாட
நட்போடு மகிழ நேசத்தோடு கூட
இனிய பாடல் பிடித்த படம்
இப்படியும் அப்படியுமாக..
சிலமணிநேரங்கள் சொர்க்கமென,
விரைந்திடும் ஞாயிறின் பொழுதுகள்..
திங்களும் ஞாயிறாக மாறிவிடாதா
எனும் ஏக்கமோடு முடிகிறது ஞாயிறு!
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம்
என்றானபின் ஞாயிறென்ன திங்களென்ன?
மனமகிழ்ச்சிக்கு கிழமைகளின் தடையென்ன?
செய்வதை மனமொன்றி செய்வோம்
வாழ்க்கையில் இயல்பாக இருப்போம்
அன்போடும் பாசத்தோடும் நட்போடும்
திருப்தியாக நிம்மதியாக சந்தோசமாக
செய்யும் செயல்களை நிறைவாக்குவோம்..
தொடாமல் படாமல் விடாமல்
தொட்டும் பட்டும் விலகாமல்
தொடர்வோம் என்றும் பயணத்தை...
நிம்மதி நம்மோடு இனிதே பயணிக்கும்..!!
நம்மிலிருந்து இன்பம் உலகில் பிறக்கும்..!!