பிரம்மா
உழைப்பென்ற சொல்லே
பிழைப்பின்றி உழைத்தவன்.
களைப்பென்ற சொல்லே
கலைந்திட உழைத்தவன்.
பூமியை தோண்டி
உண்மைகள் உரைத்தவன்.
பூவுலகெல்லாம் தன்
வியர்வையால் செய்தவன்.
மணிக் கணகில்லாமல்
அயராது இருப்பவன்.
மானுடன் வாழ்ந்திட உண
வெல்லாம் விளைத்தவன்.
சிந்திய வியர்வையில் கூட
சிக்கனம் இல்லாதவன்.
கடல் கடந்து உழைத்தும்
நம் தலைக் காப்பவன்.
கைரேகைகள் தேய்ந்தும்
கவலைகள் மறப்பவன்.
தன் கையே தன் நாட்டிற்கு
உதவி என்ற உண்மை உரைப்பவன்.
மரணத்தின் படுக்கையிலும்
உழைப்பையே நினைப்பவன்.
உழைப்பதையே வெறும்
கனவாய் நினைத்தவன்.
இறைவன் உரைத்தை
பாதையில் இன்றும் நடப்பவன்.
தன் ரத்தத்தை
கொடுத்து தான் என்றும் வாழ்பவன்.!