கயிற்று பொம்மையாய்

கயிற்று பொம்மையாய்

கயிற்று பொம்மையாய் வாழ்க்கை
நூலிழையில் என்னடா வேட்கை.
கரைந்து போய்விடும் சேர்க்கை
இதில் மரணம் கொண்டதே யாக்கை.
உன் மெய்யாள்வதே கொண்டவன் தானடா.
இதில் பொய் கூறுகள்..
நம்மிடம் ஏனடா?

நீ இன்று கொண்டாடும்
மெய்யின்று உனதில்லை.
நிலம் தாங்கும் உந்தன் உடல் தான்,
இருந்தாலும் உன் மெய்யில்லை.
உன் மெய்யென்ற மெய் கூட..
பொய் தானே வேறில்லை.
இருந்தாலும் ஆசை கொள்ளும்,
அவை தானே விதியின் எல்லை.
தேனுள்ள பூக்களை போல்
வாடிவிடும் வாழ்க்கை.
மெய் ஞானத்தை தேடுதல் தானே
நிலையான வேட்கை.
இருக்கும் வரையில் பிறார் மதிக்க வாழு,
அதில் தானே.. மனிதா..

அன்பென்ற சொல்லில் தானே
அண்டமெல்லாம் இயங்கும்.
பிழைருந்தும் காதலில் தானே
மனித வாழ்க்கை தொடங்கும்.
மனிதம் கொண்ட மனமும் தானே
இறந்த பின்னும் வாழும்.
இதமான காற்றில் தானே
மழை மேகம் பாடும்.
உண்மைகள் உணர்ந்து வாழ்ந்திட வாழாய்..
பொய்மைகள் இருந்தும்,
உதரி தள்ளாய்... மனிதா..

எழுதியவர் : கவிசதிஷ் (5-Apr-10, 4:25 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 937

மேலே