காதல் வலி
மை கண்ணீர் வடித்து உன்
பேனா சொன்ன காதல் வலி
கவிதைக்கு புரியும்
உன் கடைசி முத்தம்
சொன்னது உனக்கு இன்னும்
என் மீது உள்ள பிரியம்
என் உடைகளில்
உன் அனைப்புகளின் வாசம்
எனக்கு மட்டுமே தெரியும்
மறந்து விடு என்றாய் நீ
மன்னித்து விடு என்றேன் நான்
இருவருக்கும் கடினம் தான்.
சுமக்காத போது தான்
காதலின் வலி அதிகம் !
இல்லாத காயத்தில்
எத்தனை தழும்புகள் ?