வலியின் வழியில்
இனி திரும்பி பார்க்க
கூடாது என்று பலமுறை
நினைப்பேன் ஆனால் இயலாது...
படைப்புகளில் ஏன் ஏற்ற தாழ்வுகள்
கால்களும் கைகளும் இறுக்கமாய்
தாயின் கை பிடித்து தினமும்
நடை பயிலும் அந்த குமரிப்பெண்
தந்தையின் கண்ணீரை புரியாமல்
துடைக்கும் சிரித்த முக இளைஞன்
வரங்கள் சாபமானது இது தானா?
அன்றாட அடிப்படைகளுக்கு
உதவி தேடும்
ஒரு சில விரல் நுனிகள்
சாலைகளில் முகம் சிதைந்து நம்மை
கடக்கும் ஒரு சிலர் - வாழ்க்கை
என்பது வலியானால்
வாழ்வதில் என்ன அர்த்தம் ?
இருப்பவன் படைத்தலில்
கூட பற்றாக்குறை
நாம் குறை என்று நினைப்பது
ஒன்றுமேயில்லை என்று இப்படியா
சொல்வது இதயத்தில் அடித்து ?
சாலை தாண்டிவிட்டதும் சொன்னார்
அந்த பார்வையற்ற நண்பர்
"இனி நான் போறேன்,
நீங்க பாத்து போங்க"
மீண்டும் எனக்கு பாதை புரியவே
சில நிமிடங்கள் ஆனது..