கடவுள் வரம்
காலம் வரும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
இளமை போய்விடும் ...!
பலன் கிடைக்கும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
முயற்சி போய்விடும் ...!
எதையும் யாரையும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நம் திறமைகள் அனைத்தும் போய்விடும் ...!
நம்பிக்கையோடு நம்முடைய
பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தால்
இனிதான பயணம் வெற்றியாய் முடியும்...!
சிறுகதையான வாழ்வைத்
தொடர்கதையாக்க நாம் நம்பிக்கையோடும் உறுதியோடும் கடமையைச் செயலாற்றுவதே
கடவுள் தந்த வரமாம் ...!