வான்மேகக்கூட்ட மாநாடு

வான்மேகக்கூட்ட மாநாடு ...

மான் நாடும் பசுமை உணவு
தேன் உறிஞ்சும் வண்டின் மலர்
கான்(காடு) உறையும் மாக்களின் மலைக்குகை
வான்முகில் நாம் முகரும் நீர்த்தேக்கம்
காண் புவியில் உள்ளதாவென்று ...?

கண்ணுக்கு எட்டிய வரை புவியில்
இயற்கை சீரோடு இருப்பதாய் தெரியவிலையே...

மானிடன் வேரோடு சிதைத்த
மரத்தின் வீழ்ச்சி புவியெங்கும்
பல்கிப் பரவி இயற்கைசுற்றுச்சூழல் மாசாகி
நிற்கும் அவலமே நிலத்தில்
சீரோடும் சிறப்போடும் விளங்குவதையேக் காணமுடிகிறது ...

நாம்(முகில்) புவி இறங்கி நீர் தெளித்தாலும்
காசாக்கி பணம்சேர்க்கத் துடிக்கும் மானிடன்
நம்மைச் செயற்கை மழை பொழிவிக்க
சிறை பிடித்து ஆய்வகச் சிறைக்குள் தள்ளிடுவான்....
எனவே ...
யாரும் புவி இறங்கிட வேண்டாம்
மறந்தும் நிலத்தில் நீர் தெளித்திட வேண்டாம் ...என்று
ஒருமனத் தீர்மானமாகி
மாநாடு முடிவுற்று
கலைந்தன மேகக்கூட்டம் ..!!

--- நாகினி

எழுதியவர் : நாகினி (28-May-13, 9:06 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 68

மேலே