தாயின் முதன்மை...!

பிறந்தவுடன் நான் பார்த்த
முதல் காட்சி நீ தானம்மா
என்னை முதல் முதலில்
பார்த்த விழிகள் நீ தானம்மா
என் முதல் கண்ணிர் துளியை
துடைத்தது நீ தானம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை நீ தானம்மா
என்னுடன் முதல் முதலில்
பேசியது உன் கண்கள் தானம்மா
பள்ளி போகும் முன்பே என்
முதல் ஆசிரியர் நீ தானம்மா
என் முதல்
பெண் தோழி நீ தானம்மா
என்னை முதலில்
புரிந்து கொண்ட மனம் நீ தானம்மா
உன்னை பிரிந்து
இந்த நெஞ்சம் இருக்குமா?
அடுத்த பிறவியிலும் என்
தாயாக இருப்பாய் அம்மா...
--ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (30-May-13, 12:35 pm)
சேர்த்தது : ஹரிகரன்
பார்வை : 71

மேலே