மழை......
மழை பெய்யும் தருணங்களில்
பேருந்தில் ஜன்னலோர இருக்கை
வாய்க்கப் பெறுபவது
கடவுளின் அனுகூலம்!
மழை பொழியும் சமயங்களில்
சுமையாகிறது
ஓன்று குடை !
மற்றொன்று உடை !
மழை
வார்க்க முடியா நீர் சிலை !
மழை
கவிப் பசிக்கு மூட்டும்
கற்பனை உலை !
மழை
நனைய நனைய இறைவனை
நெருங்கும் மகிழ்வு அலை !
மழை
மண்துகள்களுடன் புணர்ந்து
தென்றலாகும்
தேவனின் கலை !
மழை ….
எப்போதும்
ஒற்றைக்கால் மரங்களின் தவமாய் !
ஓங்கிப் பெய்யும் போது
கடவுளின் வரமாய் !