மரணித்தும் வாழ்வோம்
கொண்டு வந்தது ஒன்று இல்லை
கொண்டு செல்ல ஒன்றும் இல்லை
வாழ்ந்து சருகாகும் இந்த பூமியில்
மக்கிபோவதில் மனித உடலும் ............
மூச்சுகாற்று நின்றுபோனால்
மனிதன் உடல் பிணம்தானே,
மகத்துவம் நிறைந்த உடல் இதை
மண்ணோடு மக்கவிடலாமா .............
துடித்து நின்ற இதயத்தை
துடிக்க வைப்போம் மீண்டும் ஒருவரிடம்
இருண்டு போன கண்களால்
வெளிச்சம் கொடுப்போம் இன்னுமொருவருக்கு ......
சுவாசம் தந்த நுரையீரல் தன்னை
சுவாசிக்க வைப்போம் இன்னொருவரிடம்
சுத்தம் செய்யும் சிறுநீரகம் அதை
சுழற்சி முறையில் மீண்டும் தருவோம் .........
மீண்டும் சுரக்கும் ரத்தம் அதை
நேயம் சுமந்து தானம் செய்வோம்
வாழதுடிக்கும் நிறைய பேருக்கு
வாழ்வளித்து வாழ்வை தொடர்வோம் ...........
இன்னும் நிறைய பாகங்கள் உண்டு
மகத்துவம் நிறைந்த மனித உடலில்
ஒன்றைகூட வீன்செயாமல்
உதவிசெல்வோம் கல்லறை நோக்கி .........
கருவறை தந்த புனித உடலை
கல்லறையில் புதைத்து வீணாக்கலாமா
அன்னை தந்த ஓர் உடலால்
வாழவைப்போம் பலரை நாம் .......
மக்கிபோகும் மனித உடலை
பொக்கிஷமாக்கி வாழ்வளிப்போம்
இறந்த பின்பும் வாழ்ந்திருப்போம்
இருக்கும் பலரில் வாழ்ந்திருப்போம் ........
விட்டுகொடுக்கும் மனம்தானே
சொர்க்கம்வரை கொண்டுசெல்லும்
வாரிகொடுக்க தேவையில்லை
மீதத்தையாவது கொடுத்து செல்வோம் ...........
வயதுஎன்பது இதில்இல்லை
வழங்கி செல்லலாம் நற்க்கொடையாக
மறைந்துபோவது ஆன்மா மட்டுமே
மனித உடல் மீண்டும் வாழட்டும் ........
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மனித உடலை கொடையாய் தந்து
மூச்சுமட்டும் இறந்ததாய் இருக்கட்டும்
உடல்பாகங்களுக்கு மீண்டும் வாழ்வளிப்போம் !