கொடுமைடா சாமி
மத பொருத்தம்
இருந்தது ...
சாதி பொருத்தம்
பார்த்தார்கள் ...
ஜாதக பொருத்தம்
கேட்டார்கள் ...
வரதட்சனை
சீர் வரிசை சீராக
போடும்படி சொன்னார்கள்
ஒரு வழியாய்
திருமணமும் முடிந்தது
பின் முன்று மாசத்தில்
அவள்
பிறந்த வீட்டிற்கு வர
ஓயப்பாரி வைத்து
இடுகாடுக்கு தூக்கிகொண்டு
போனார்கள் பிணமாக
மன பொருத்தம் பார்த்து
மணம் செய்யாததால் ...