நான் கவிஞன் அல்ல

கண்ணில் காணும் பொருள்களுக்கெலாம்
கவிதை எழுதும்
கவிஞனே...
காணாத பொருள்களுக்கு
எப்பொழுது தொடங்கபோகிறாய் - உனது
கற்பனை நயத்தை?...

மண்ணில் தோன்றும்
மலர்ந்த மலர்களில்
மணம் நுகர்ந்த - நீ
எப்பொழுது மணம் கொடுக்கப்போகிறாய்
மலராத மலர்களுக்கு?...

காற்றில் வரும் கீதத்தை
ருசித்த - நீ
எப்பொழுது ரசித்து
எழுதப்போகிறாய் - அதன்
இனிமையை? ...

அதையெலாம்
நான் எழுதினால்
நான் எழுதியது
கவிதையுமல்ல; - அதை
கவிதையென்று யாரேனும் சொன்னால்
நான் கவிஞனுமல்ல...!

எழுதியவர் : மலர் பிரபா (3-Jun-13, 7:26 pm)
பார்வை : 94

மேலே