நீயே என் எதிர்காலம்...!

அன்புச் செல்வமே
ஆருயிரே தங்கமே...!
நேர்ந்து தவமிருந்து
நான் அள்ளிய வைரமே....!

அன்னை துயருணர்ந்து
அமுதூட்டும் உன் கைகள்
பிள்ளைக் கனியமுதே உணர்வாய்
என் நாளையின் நம்பிக்கைகளவை...

தாய் பிள்ளைக்கு ஊட்டும்
காட்சி இங்கு தலை கீழாய்...!
வையகம் காணாத காட்சியை
பதிவு செய்தாய் வரலாறாய்....!

கைம்மாறு எண்ணாமல் உதவி
கனிவுடன் கவனிக்கிறாய் அன்னையாய்.....!
தரணியிலும் உனக்கு சொர்க்கம்தான்
தரமான என் சொக்கத் தங்கமே நீ கேளாய் .....!

--------------------------------------------------------

எழுதியவர் : abusaaema (3-Jun-13, 11:22 pm)
பார்வை : 146

மேலே