கனவு

மூடிய கண்களுக்குள்
தேவதையை ரசித்துக்கொண்டிருந்தேன்
காதருகே செல்போன் சிணுங்க
தூக்கம் கலைந்தது ,
கண்களை திறக்காமல் அவளை தேடினேன்
வெட்கத்தில் கனவுக்குள் நிற்காமல்
கண்களை தாண்டி ஓடினாள்!!!
அழைப்பது யார் என்று பார்த்தேன்
அங்கேயும் அவள் பெயர் தான் :)
கனவுக்குள்ளும்
செல்போன் அலைவரிசைகுள்ளும் புகுந்துகொண்டு
என் நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்க வைக்கிறாள் !!!!

எழுதியவர் : பரிசோ டேனியல் (6-Jun-13, 2:21 am)
பார்வை : 89

மேலே