எட்டாத அதிசயம்......

எப்போதும் புலர்வது போல் தன் கூரிய அம்புகளால் திசையை கிழித்துக் கொண்டு கிழக்கிலிருந்து வெளியே வந்தான் ஆதவன்.அந்த கிராமத்தில் ஒரு பழக்கம்.., பெண்கள் எல்லாம் சூர்யோதயதிற்கு முன் எழுந்து வாசல் பெறுக்கி,கோலாம் போட்டு அழகுபடுத்திக் கொண்டிருப்பார்கள் ஆண்கள் அப்படியே வேப்பங்குச்சியை வாயில் வைத்து பல் துலக்கி கொண்டிருப்பார்கள்.எப்போதும் பரபரப்பாகவே அந்த ஊர் இருக்கும்,எல்லோரும் வேலைக்குப் போவார்கள் சிலர் காட்டு வேலைக்கு சிலர் கம்பனி வேலைக்கு இன்னும் சிலர் பக்கதில் இருக்கும் செங்கற் சூலைக்கு.இதில் வயது வித்தியாசமே கிடையாது " நரைத்தவர் முதல் நண்டு சுண்டெல்லாம்" வேலைக்குப் போவார்கள்.ஆண்களுக்கு 100 ரூபாய் பெண்களுக்கு 60 ரூபாய் சிறுவர்களுக்கு 50 ரூபாய் இதுதான் அந்த செங்கற் சூலையின் "லேபர் கூலி" சில இடங்களில் அந்தந்த முதளாளிகளுக்கேற்ப கூலி மாறுபடும்.இங்கே ஆணுக்குப் பெண் சமமெல்லாம் கிடையாது இங்கே எப்போதும் பெண்கள் ஆணைவிட கீழே தான்.மானுட முன்னேற்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சாதி-மத சடங்குகள்,ஆணுக்கு பெண் அடிமை என இவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறார்கள்.
இங்கே இன்னும் "பாராதி நுழையவேயில்லை ஆனால் "பார்"அது நுழைந்து பல காலமாகிவிட்டது".
அலங்கோலமாய் ஆடை அணிந்து வேலைக்கு செல்லும் இவர்கள் கைகளில் கடிகாரம் அரிது,பிறகு எப்படி இவர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு புறப்படுகிறார்கள்?வாகன புழக்கம் குறைவேயான அந்த பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கிராமங்களில் இருந்து நகரத்திற்கு சென்று வரும் நேரங்கள் தான் இவர்களுக்கு "வாட்ச்".அந்த பேருந்து நகரத்திற்குள் செல்லும் போது தங்கள் தலைகளில் வண்டு கட்டிக்கொண்டு ஆண்கள் செங்கல் கலவையை கலந்தும்,பெண்கள் சிறார்கள் தங்கள் தலையில் ஐந்து அல்லது ஆறு வீதம்"பச்சை கல்லை"(பச்சை கல் என்பது சுட்ட செங்கலைவிட கூடுதல் சுமையாக இருக்கும்,வீடு கட்டும் இடங்களில் நாம் பார்பதெல்லாம் சுட்ட கற்கலே)சுமந்து வேலையை தொடங்குவார்கள்.சூரியன் உச்சம் தொடும்போது உணவு இடைவேளை சற்று தனியும் வேலை சாயங்கால தேனீர் இடைவேளை.வெயிலை போலே அங்கு வேலையும் கடுமையாக இருக்கும்,கண்கானிகளை "கலப்புக் கடைகளில்"இட்டிலி,போண்டா,
சிகிரெட் என வாங்கிக்கொடுத்து "சரிகட்டலாம்"சுட்டெரிக்கும் சூரியனை என்ன செய்வது செங்கலோடு இவர்களும் கருகிக் கொண்டிருப்பார்கள் அந்த பிஞ்சு பூக்களும் அவர்களோடு கருகிக் கொண்டிருப்பார்கள்.பேருந்து வருகிறது ஒரு பக்கம் பள்ளிகளுக்குப் புறப்படத்தயாராய் சில பிள்ளைகள் மறுபுறம் செங்கற் சூலையில் வேலைக்கு செல்ல தயார்நிலையில் அதே வயதொத்த சில பிள்ளைகள்.

எழுதியவர் : மீனாட்சி.பாபு (7-Jun-13, 9:29 am)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 78

மேலே