ஒன்பதாம் திசை (குமார் பாலகிருஷ்ணன்)

ஒன்பதாம் திசை


வேண்டாம் நண்பா
வேண்டாம் . . .
இன்னும் மீசை கூட
முளைக்காத முகம்
உன்னுடையது . . .
பார்த்துக்கொள்
தாடி தழும்பிவிடப்
போகிறது . . .

உன் நரம்பறுப்பாள்
அதில் வீணை சமைப்பாள்
அதைத் தன் குழந்தையின்
கையில் கொடுத்து
நர்த்தனம்
செய்யச் செய்வாள்

நீ அவளுக்காக
வளர்த்த தாடி காட்டி
தன் குழந்தைக்குப்
பயம் கூட்டி
புவ்வா ஊட்டுவாள் . . .

நீ சுமக்கும்
சிலுவையிலிருந்து
சிறிதளவு
வெட்டிக் கொள்வாள் . . .
உன் சுமை குறைக்க அன்று
சிறிய மகனுக்கு
விளையாட
மட்டை வேண்டும் என்று

என்னத் தவிர
உனக்கு
நெப்போலியனையும்
கல்யாணியையும்
நண்பர்களாக்கி
விடுவாள் . . .

தலை கீழாய்ப் போட்டாலும்
தவறாகாத வட்டம்
நீ நேராய்ப் போட்டால் கூட
தவறாய்ப் போகும் . . .

உன் உதிரச்சாயம்
அவள் உதட்டுச்சாயமாய்
மாறிப் போகும்

உனக்கு இரு வழிகள்
உண்டு . . .

உலகே உன்னை
உற்றுப் பார்க்கும்
ஒன்று . . .

உயிரே உன்னை
உதறித் தள்ளும்
வேறொன்று . .
.
ஒரு முடிவுக்கு வந்து விடு
உன் முடிவுக்கு விடைகொடு

காலத்தின் கால்பகுதி
நீ கடந்து விட்டாய்

புரிந்து கொள்
சிறிது தான்
உன் வாழ்க்கை
சிறிது தான்
அரிது தான் அதில்
வாய்ப்புகள் அரிதுதான்

எனவே
காற்றுள்ள போதே
தூற்றிக்கொள் . . .

முடிந்தால் அடிக்கும்
காற்றை
உன் திசைக்கு
மாற்றிக் கொள் . . .

சில பெண்கள் மட்டும் ====குறிப்பு

எழுதியவர் : kumaresan (7-Jun-13, 8:13 pm)
பார்வை : 127

மேலே