எங்கேபோகிறது ??

ஒவ்வொரு நொடிகளும்
ஒரு யுகமாகிறது
நொடிந்தவனின் நாட்களில்

நிமிடம் தவறாமல்
பூத்துகொண்டே இருக்கிறது
வலிகள்
வறுமையின் தோட்டத்தில்

உயிரைக்கொடுத்து உழைப்பவனுக்கு
இங்கே உயர்வில்லை..
உயர உயர பறப்பவனுக்கு
உயிர்களை மதிக்க நேரமில்லை

வாழ்க்கையென்ன வாகனச்சக்கரமா
பழுது பார்த்துக்கொள்ள ?

வறுமையை யார் தந்தது ?
கடவுள் சொன்னாரா
நீ வறுமையில் வாடு !
இவன் வளமையில் வாழ்வான் என்று..
நிச்சயமாய் இல்லை...
பணத்தை மதித்து
மனிதன் படைத்தது
மனதை மிதித்து
மனிதனால் விதைகபட்டதுதான்
வறுமை..

எங்கு போயினும் ஊழல்
எதை எடுப்பினும் பாகுபாடு

லஞ்சம் வாழ வகை செய்கிறோம்
பிறர் நெஞ்சைக்கொன்று !..

மனம் கவர்ந்த பண்பாடு
மக்கிப்போனது
மனிதனின் மனம் குப்பையானது ..

நாகரீக மோகம்
தலைவிரித்தாடுது தாய்நாட்டிலே..
பெண்மகள் நிலைகுலைந்து போகிறாள்
நடுரோட்டிலே

முதுமைக்கு மரியாதை இல்லை
சில இளமைக்கு மனமாற்றமில்லை..

ஊனமுற்றிருப்பது
உடல் உறுப்புகளல்ல
மக்களின் மனம்தான் ..

விண்ணைத்தாண்டி ஒரு பயணம்
மண்ணைதின்று ஒரு மரணம்..

இது வாழ்கையின்
மறுபக்கமல்ல
சமூகத்தின் ஒரு அங்கம் ....

எழுதியவர் : எழில்கர்த்தி (8-Jun-13, 10:52 am)
சேர்த்தது : ezhilkarthi
பார்வை : 62

மேலே