நாற்றுக்கள்
நேற்று வரை வாழ்ந்த வீடு -இனி
நினைவு சின்னமாய் ....,
கூடிப்பேசிய தோழிகள் - காற்றில்
கரைந்த கற்பூரமாய் ...,
அன்னையின் அன்பு - தவணையாய்
ஆண்டுக்கொண்டாட்டங்களின் போது
தாவணி கனவுகளுடன்
தாளமிட்ட கால்கள் .....,
தாரமாக போகிறது
தாலிகட்டியவனுடன் - இந்த
பெண் நாற்றுக்கள் என்றுமே
பிறத்தியார் வீட்டு கொல்லைக்கு.......,