உணர்வுள்ள இந்தியனாய் வாழ்

தன்மானம் போலவே
நம் தாய்மனம் காப்போம்
பெற்றுஎடுத்தவள் மட்டும் அன்னையல்ல
பிறந்து வளர்ந்த நாடும்தான் .............

அநியாயங்கள் காணும் வேளையில்
உணர்வோடு கொத்தித்தெழுந்து
அடியோடு அழித்திடுவோம்
ஒவ்வொருவரும் கடமை செய்வோம் ...........

சமத்துவம் போதிப்போம்
சமாதானம் பரப்புவோம்
பேதங்களை தவிர்ப்போம்
மனிதத்தை வளர்ப்போம் ................

தாய்மானம் காக்க
போராடும் பிள்ளைபோல
தாய்நாட்டின் மானம் காப்போம்
தலைநிமிரிந்து வாழ்ந்திடுவோம் .............

பிரிவினை கொள்ளாது
என்றும் நட்போடு
இணைந்து வாழ்வோம் ஒற்றுமையோடு
சாதனை செய்வோம் பற்றோடு ..........

மொழிப்பற்று இனப்பற்று
எல்லைபற்று என எதுவும் இல்லாமல்
நாட்டின் மீது பற்று கொள்வோம்
நலம்பல கண்டு வாழ்வோம் ...........

பிறந்தமண்ணை உயிராய் நேசித்து
இறக்கும் வரையில் போராடு
பெண்ணின் மானம் காத்து
உண்மையான வீரனாகு ...............

அடிமைதனமும் தேவையில்லை
ஆளுமைதனமும் தேவையில்லை
சமாதானம் கொண்டு வாழ்ந்து வா
சரித்திரம் படைக்க எழுந்து வா .............

பறந்து விரிந்த இந்தியாவின்
புகழை பரப்புவோம் உலகம் எங்கும்
சோம்பலோடு செத்து மடியாமல்
வீரத்தோடு உழைத்து வாழ் .............

உன்னால் முடிந்ததை நாட்டுக்கு செய்
ஓர்நாள் நாடே உனக்கு தலைவணங்கும்
உண்மை இந்தியனாய் உணர்வோடு வாழு
பெருமை கொள்ளும் இந்தியனாய் மாறு !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jun-13, 7:49 pm)
பார்வை : 85

மேலே