வற்றும் கலி மண் - சி.எம்.ஜேசு

மிதி மிதி என மிதித்ததால் - கலிமண்
குயவனின் கையில் இசைவானது

வசமாக அதைப் பிடித்து
வளைத்து நெளித்து பல
பானைகலாக்கி

குவித்து நெருப்பினால்
சுட்டு அவித்து தட்டிப் பார்த்து
விற்றுத் தீர்த்தான்

விற்ற பானைகள் வீடுகளுக்கு சென்று
மீண்டும் விறகினால் சுடப்பட்டு
சோற்றின் உலைக்கு வழியானது

உழைக்கும் மக்கள் உயிர் பசிக்கு
இணங்கிப்போன கலி மண்ணே

கலைகளுக்கும் ,சிலைகளுக்கும்
வணங்கிப்போன உன்னை
வற்றும்படி செய்து விட்டனரே - மாடி
வீடு கட்டும் மாந்தர்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (8-Jun-13, 7:22 pm)
பார்வை : 104

மேலே