அடிமை
அன்புக்கு நான் அடிமை அது
ஆக்கம் தருவதினால்
இனிய பண்புக்கு நான் அடிமை அது
ஈகையே வளர்ப்பதினால்
உண்மைக்கு நான் அடிமை அது
உயர்வை தருவதினால்
எளிமைக்கு நான் அடிமை அது
ஏற்றம் தருவதினால்
ஒழுக்கத்திற்கு நான் அடிமை அது
ஒப்பின்மை என்பதினால்