குருவே என் எழுத்துருவே....மறவேன்...

குருவே ,

என்ன செய்ய வேண்டும்.,ஓவியம் வரைய......?
"கண்களை மூடு !"

என்ன செய்ய வேண்டும், சிரித்து வாழ.......?
"வலி உணர் !"

மலைக்குச்செல்ல....?..
"உச்சியை நேசி ..!"

கடலில் நீந்த ...?.
"மீன்களோடு வாசி !!"

பூக்களொடு பேசிட....?
" வேரினைக் காதலி !!"

-------காற்றை அனுபவிக்க .....
புழுக்கத்தினுள் நுழை !!

உணவு உண்டிட...?
"பசியைப் பூசி !! "

-மானுடம் விரும்ப...?
" நூல்களினுள் வசி !!"

செல்வம் பல பெற..?..
" வியர்வை வாசி !!! "

வாழ்வைத் தேட...?
" திசைகளில் பற !! "

கவிதை எழுதிட....?
" உன்னை மற !! "

நட்பு பெற்றிட..?..
" சுயம் துற !!!! "

----------எல்லாமும் பெற்றிட...???
" எதையும் ஏற்காதே...!! "

(ஜென் பாதிப்பு ) .


.

எழுதியவர் : அகன் (10-Jun-13, 7:37 pm)
பார்வை : 124

மேலே