தானியங்கி காசாளும் இயந்திரம்
ஒரு நெகிழி அட்டையோடு
காலில் பம்பரத்தை கட்டிக்கொண்டு
கண்ணாடி கதவை திறந்து
உள்ளே இருக்கும் வாயில்லா
இயந்திர மனிதனின் வாயில் அட்டையை செருகினால் வருவதோ வெள்ளை காகிதம்
அது சொல்கிறது உன் கணக்கில் ஒன்றுமே இல்லையென்று
அடடா.....இன்று பதினைந்தாம் தேதியா....