ஏழை நாங்கள் காற்றில் ஓடியும் வாழை

அதிகார வம்சத்தின் போக்கு
சர்வாதிகாரம் தாண்டி அடக்குகையில்
பகைத்துக்கொள்ள பலம் இல்லை
பயந்து ஒதுங்க இடம் இல்லை ...............

நேற்றையபோலவே
இன்றும் தொடருது அடிமைத்தனம்
உழைத்து தேய்நதவர்கள் நாங்களாகிறோம்
வளர்ச்சிப்பாதையில் அவர்கள் ...............

உழைப்பை இழந்தோம்
உடைமைகள் இழந்தோம்
குடிசையோடும் கும்மிரிட்டோடும்
கடந்துபோகிறது எங்கள் வாழ்க்கை ............

கல்தூக்கியும் மன்தூக்கியும்
கால்கள் மருத்துப்போய் ஆணி பாய்ந்துகிடக்க
கடைசிவரையில் ஓய்வில்லாமல்
கருத்து மெலிந்து கரைந்துபோகிறோம் மண்ணோடு

தினமும் பிறக்கும் விடியல்
எங்களுக்கென்று ஓர் நாளும் இல்லை
கீழ்த்திசை புறபட்டு
மேல்திசையிலேயே அடைக்கலமடைகிறது ..........

ஏழ்மைக்கு இயற்கைகூட எதிரியோ
கொட்டும் மழையும் வீசும் புயலும்
கூரையின் மீதல்லவா
மையம் கொள்கிறது இன்றுவரை ..............

மிட்சங்கலோடும்
மீதங்களோடுமே
தொடங்கி முடிகிறது ....................

சுற்றிவரும் பூமிபோல
எங்கு சுற்றிலும் கொத்தடிமைகளாகவே
கூறுபட்டு கிடக்கிறது
எங்களின் பாடு நிறைந்த வாழ்க்கை ................

இறந்தவரும்
இன் பிறப்பவரும்
ஒரே வாழ்க்கை சக்கரத்தில்
உருண்டோடியே கரைகிறார் ............

மூச்சு முட்டி முளைத்து
செழுத்துவரும் வேளையில்
ஆர்ப்பரித்துவரும் அதிகாரபுயலால்
நாங்கள் ஒடிந்து ஒழிந்துபோகிறோம்
காற்றில் ஓடியும் வாழையாய் ................

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Jun-13, 3:59 pm)
பார்வை : 64

மேலே