இயற்க்கை இசை
இடித்து துடித்து ஓடும்
இடியின் ஓசை விண் இசை
பளீர்! சுளீர் ! என பறந்து
வேர்களின் வடிவில் மின்னும்
மின்னலின் ஓசை விண் இசை
தென்றல் தாலாட்டில்
மேகங்கள் கூடி செழுமைககு
வாழ்வாகும் மழையும் விண் இசை
குமுறும் எரிமலை உணரும் பூகம்பம்
ஓயாது அடிக்கும் அலைக்கடல்
யாவும் மண் இசை
உயரத்தினின்று ஆழத்தில் விழும்
அழகிய வெண்மை அருவி
நீண்ட இடமெல்லாம் ஓடி
சமுத்ரத்தில் சங்கமிக்கும் ஆறு
இவையாவும் மண் இசை