போராளியின் வெற்றி சலனம்-"சே"

பூமியில் விழும் கோடி
உயிர்களில் சில உயிர்களுக்கே
வீர்யம் இருக்கும் அது மிச்ச
உயிர்களுக்கும் வீர்யத்தை
அளிக்கும் !!!!

உலகில் மூலை முடுக்கெல்லாம்
ஏகாதிபத்யத்தின்
ஏமாற்றுத்தனம் இருக்கிறது
அதை சிலரின் கண்கள்
மட்டுமே பார்க்கிறது
மற்ற கண்கள் எல்லாம்
இன்னும் குருடாக கை கோர்த்து
நிற்கிறது !!!!!

எங்கோ பிறந்து
பின் எங்கோ உள்ள
மக்களுக்கு போராடும்
போராளிகள் சிலரே யாதும்
ஊரே என்று யாவருக்கும்
அவர்களின் உயிர் அலைகள்
சொல்லிகொண்டே இருக்கும் !!!!!

அப்படியொரு புரட்சி
உயிர்தான் இவன் -கொள்கை
கோட்பாடு அனைத்தும்
சோசியலிசம் மட்டுமே
நோய்க்கு சிகிச்சை
அளிக்கும் மருத்துவர் இவன்
ஏகாதிபத்திய கண்களுக்குள்
இவன் விட்ட அறுவைசிகிச்சை
கத்தி போராட்டத்துக்கே உண்டான
புதிய யுக்தி !!!!

இன்று மனித மூளை
சோர்வடைந்துள்ளது
அவனது மூளைகளில்
தன்னம்பிக்கை இல்லை
தைரியம் இல்லை
எதையும் சந்திக்கும்
துணிச்சல் இல்லை
கேட்டால் சமாதனம் எங்கும்
நிலவட்டும் என்ற தொய்வான
வசனம் அவனது ஓய்ந்து
போன ரத்தம் செல்லும்
குரலில் இருந்து
வெளி வருகிறது !!!!!

நீ சுடுவது ஒரு சாதாரண
மனிதனைதான் "சே" வை
அல்ல என்ற வீர வசனம்
சாவின் விளிம்பிலிருந்து
இன்று யாருக்கேனும் வருமா
இவனிடமிருந்து வந்தது !!!!!

இத்தனைக்கும் இவன் ஆஸ்துமா
நோயாளி !!!என்ன செய்ய
முதலாளித்துவ முதலைகள்
உயிர் காற்றை உறிந்துவிட்டால்
போராட்ட குணம் உடைய
நுரையீரல் சத்தகன்ற
காற்றை சுவாசித்திடுமா
என்ன ?

முதலாளித்துவம் என்று ஓய்கிறதோ
அன்றுதான் மனிதம் தனது கால்களை
இந்த பூமியில் முழுதாக பதிக்கும்
அதுவரை முடமாக்கப்பட்ட கால்களின்
பாதசுவடுகள் இங்கு எப்போதுமே
காணப்படும் !!!!!!

இன்று பல குண்டுகளின் சத்தத்திற்கு
பின்னால் ஏகாதிபத்தியத்தின் வணிக
வெறி இருக்கிறது ........
நெஞ்சில் பதியும் குண்டுகளை
மட்டுமே நாம் பார்க்கிறோம்
அந்த புகை எங்கு கசிகிறது
என்பதை நமது கண்கள்
உற்று நோக்குவதில்லை !!!!!!

உலகத்தயே தனது காலடிக்குள்
செலுத்த நிலா பந்தயம் செய்வதன்
ரகசியம் பலருக்கு புரிவதில்லை
என்ன செய்ய ஐஸ்வர்யாராயிக்கு
உலக அழகி பட்டம் தந்தாலே
சந்தோசப்படுகிறோம் ஆனால்
அதன் பின் வந்த வணிகபோரை
யாருமே பார்பதில்லையே
பார்த்தால் சேக்குவேராவின்
போராட்டம் இங்கும் நடைபெறும்
காரணம் ,அவன் சொல்கிறான்
"முட்டி போட்டு வாழ்வதை
விட நின்று கொண்டு சாகலாம்"!!!!

இன்று இந்த புரட்சி
விதையின் பிறந்த நாள்(ஜூன் 14)
இவன் இறக்கவில்லை
இன்றும் க்யூப பள்ளிகளில்
இசைக்கும் காலையிலான
இருவரி கடவுள் வாழ்த்து
இதுதான் "ஆம் எங்களது
மூதாதையர் கம்யூனிஸ்ட்களாக
இருந்தனர் நாங்கள் சேகுவேராவை போல
இருப்போம் "!!!!!

இதை விட இந்த போராளிக்கு
ஒரு பாராட்டு இருக்க முடியுமா
இந்த போராளி இன்னும் வாழ்கிறான்
இந்த பிஞ்சு உள்ளங்களில்
இடியென முழங்கும் போராட்ட
விதையை தூவியவாறு !!!!!!
இப்போது சொல்லுங்கள் இவன்புரட்சி
விதைதானே !!!!!!!
இதை விட வெற்றிசலனம் இருக்க
முடியுமா என்ன ?

*************************************************************************
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (14-Jun-13, 2:19 pm)
பார்வை : 653

மேலே