மழை நீர்

மனிதனுக்கு தாகம்
மண்ணிற்கு விளைநிலம்
உனக்கு தான்
எத்தனை
தசாவதாரங்கள் ........
விண்ணில் தோன்றிய உன்னை
விரயம் செய்தால் வேதனை ........
அன்னையாக மாறுகிறாய்
அனைத்து உயிர்களுக்கும் .........
வானில் அரங்கேறுகிறது
இடி மேளமும் ,மின்னிய வெளிச்சமாக
உன்னை வரவேற்பதற்காக ..........
காலம் கடந்து காக்கிறாய்
காசுகள் ஏதும் வாங்காமலேயே ...................