அழகிய தாஜ் மஹால்
காதலை விழுங்கிய
கல்லறையின் மவுனம்
உரசிப் பார்க்கின்றது
சில்லறைக் கீறல்களின் கீற்றுகளாய் ...!
ரத்தச் சிவப்பின் நாக்குகள்
சில்லிடுகின்றது
வெண்மைப் பளிங்கு சுவர்களில் ...!
தன் காதல் மொழிகளை
எழுதமுடியாமல்
தவிக்கின்றார்கள்
உண்மைக் காதலர்கள்...!
காதலின் புலம்பல்
யாரும் கவனிக்கப் படாமல்
காற்றில் கலந்தே சுவாசிக்கின்றது ...!