தெருவோர அழுகுரல்

கட்டிக்க துணியில்லை
கண்டிக்க தாயுமில்லை
காப்பாத்த தந்தையுமில்லை
காத்துக்க வீடுமில்லை

வானமே கூரை -குப்பை
மேடுதான் மெத்தை
தூங்கின என்னை எழுப்ப
முகத்தில் விழும் குப்ப!

தாங்கிட மடிஇல்லை-ஆனா
ஏந்த ஏந்த கைகளுண்டு!

தொண்டுகளுக்கு கூட்டமுண்டு ...
என்னை கண்டுகொள்ள யாருண்டு......?

நானும் காந்தியும்
ஒரு விதத்துல ஒன்னு
எங்கள நாங்களே துகிலுருச்சுக்கிடதுல !

ஐயோ பசிக்குதே என
அழுத நாட்கள் சில.....
ஐயோ என்னை ஏன்
படைத்தாய் இறைவா என
அலறிய நாட்கள் பல ......

பசிச்சு நானும் இருக்கையில -ருசியா
இலை வந்து விழுந்ததைய்யா!
என்னனு நானும் பார்க்கும் முன்னே
லபக்கென்று தூக்கிட்டு ஓடுது நாயய்யா!

எழுதியவர் : sasitha (17-Jun-13, 9:57 am)
பார்வை : 89

மேலே