உன் நினைவோடு நான் தானே.. !

மிக தொலைவிலே நீ..!
அதனால் தினம் தொலைகிறேன் நான் ..!

உன் நினைவுகள்.. சுகம் தான்..,
ஆனாலும் என் இருதயம் ஒரு வலி சுமக்குதே..!
சுகமான சுமையாய் உன் நினைவுகள் ஆனதேன்..!?

இடை வெளி இன்றி பேசி திரிந்தோம்.. !
இன்று இடைவெளியில் வாழ்வை கழிக்கிறோம்..!
அன்று என் நிழல் போலே நீ இருந்தாய்..!
இன்று உன் நிழலை கூட நான் காணவில்லையே..!?

அன்று அழுது ஓய்ந்த நினைவுகள் ,
இன்று மகிழ்வை அள்ளி தருவதேன்..!?
அன்று கவலை தீர்த்த என் கவிதைகள்,
இன்று கண்ணீரை தருவதேன்..!?

காலங்கள் எழுதிய கதைகளில் கண்ணீர்
பக்கங்கள் இவை தானோ..!?

உன் நினைவுகள் எண்ணி எழுகிறேன்..
நினைவின் பாரம் தாங்காமல் ஓய்ந்து விழுகிறேன்..,
ஓய்ந்து விழுந்த மனதுக்கு,
உன் நினைவையே மீண்டும் ஊட்டுகிறேன்..!

தொலைவிலே நீ இருந்தாலும்..
மிக அருகிலே உன்னை உணர்கிறேன் நான்..!

உடல் விட்டு என்னுயிர் பிரிந்து போனாலும்..,
அண்ணா ,
உன் மேல் நான் கொண்ட அன்பு
எந்நாளும் உயிரற்று போகாது ..!

எழுதியவர் : நிஷாந்தினி.k (18-Jun-13, 9:02 pm)
சேர்த்தது : k.nishanthini
பார்வை : 71

மேலே