எனது குறிப்பேட்டின் பக்கங்கள் [11]

எத்தனையோ ஆண்டிற்கு
ஒருமுறை
பூமியை
நிலவு
நெருங்கி வருவதை
துல்லியமாய் கணிக்கும்
விஞ்ஞானிகளே !

நான்
தனிமையின் தாக்குதலில்
பொடிபொடியாய்
நொறுங்குவதற்குள்
என்னவள்
என் மனதை
நெருங்கும் நாளை
கொஞ்சம் கணியுங்களேன் !!
[25]
*******************

உனது இருப்பிடம்
எனக்குத் தெரியவில்லை

என் பார்வையிலிருந்து
எங்கு மறைந்து போகின்றாய்
என்பதும் புரியவில்லை

எந்தத் தகவலும்
யாரிடம் இருந்தும் இல்லை
யாரிடமிருந்தும் இல்லை

என்றாவது ஒரு நாள்
என் நினைவுகளின் நிழல்
உன்னில் விழும்போது
என்னைத் தேடி வரலாம்

அப்போது
நீ
ஏமாற்றமடைந்து
திரும்புவாய்

நான்
எங்காவது
உன்னைத்தேடி
அலைந்து கொண்டிருப்பேன்
என்னை இழந்தபடி !
உன் காதலை மட்டும்
நினைவில் சுமந்தபடி !
[26]
**************************
[ பக்கம்… 12..... தொடரும் ]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (22-Jun-13, 6:43 pm)
பார்வை : 125

மேலே