அழியும் கருவரைப்பூக்கள்
ஆணும் பெண்ணும் சேர்ந்து
களவி தீர்த்த போது
கடவுள் கொடுத்த
வரம் ஒன்று
கருவறையில் விதையானது
களவியே
தம் தேவையென்று
தினம் கட்டிலில் விளையாடிய போது
கருவறையில் பூர்த்த மலரை
அவர்கள் தம் களவியின்
கழிவாய் பார்த்தனர்
நெஞ்சிலே ஈரம் இன்றி
விதையின் பெறுமதி அறிவின்றி
கர்ப்பத்திலே
விதியினை முளைக்குமுன்
முள்ளால் குத்தி
கசக்கி விட்டனர்
எத்தனை பெண்கள்
கார்ப்பத்தில் ஒரு விதை இன்றி
தவம் ஒன்று கேட்டு
கடவுளிடம் கையேந்தி நின்றாலும்
இறைவன் தான் விரும்பும்
கருவரைய்க்கே அவன்
ஒளியேற்றி வைக்கின்றான்
கசக்கி விதை
மலராக வேண்டி
இறைவனிடம் கையேந்தும் போது
அவர்களுக்கு புரியும்
அந்த கசக்கி விதையின் விலை
விலை மதிக்க முடியா
ஒரு மாணிக்கம் என்று