மறந்து போன காதலி

பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

உன் பின்னல் நடந்தால்
போகும் வழியின் தூரம் தெரியாது
இன்று நடத்தல்
காதல் வலியின் துயரம் தெரியவைகிறாய்......

விழிகளை கசக்கி
கண்ணீரை நிறுத்தி
கைகளை துடைக்கிறேன் சிறுபிள்ளையென...

காரணம் தேடி
காற்றோடு பேசி
கண்ணீர் துளிகள் மரணிகிறது தினம்.,,

காதல் கடலில் நீந்தி
கிணற்று தவளையானது
என் காதலும்....

சாலை ஓரம்
தடுக்கி விழும் போதெல்லாம்
போதையை விட
உன் நினைவே என்னை
தள்ளிவிட்டதாய் சந்தோசம் கொள்கிறது....

ஆல மர விழுதும்
அது தரும் நிழலும்
இரவானால் துணையாகாது உணர்ந்தேன்
நீயில்லாமல் நான் மட்டும்
நிலவில்லா நீல வானமாய்....

என்னை எப்படி மறந்தாய்
அந்த ரகசியத்தை சொல்லிவிட்டு
நானும் அப்படியே
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்....

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரனாய்....

நீ மட்டும் இறந்துவிடதே
நாயில்லாமல் நீ சொலியது
இப்படி என்னை தினம் கொல்லதானா.?..

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

வானும் மண்ணும்
நீரும் சாட்சி
மறந்து போன
நீயும் சாட்சி....

காதல் என்ற
சொல்லும் சாட்சி
கடைசியாய் மீதமுள்ள உன்
நினைவும் சாட்சி
என் காதல் உண்மை....

இதோ மறந்து போன காதலி
திறந்துவிடுகிறாள் கல்லறை கதவை
நானும் என் காதலும்
கைகோர்த்து செல்ல...

எழுதியவர் : ரகு (23-Jun-13, 12:42 pm)
பார்வை : 341

மேலே