வருவாயா என் மரண ஊர்வலத்திற்கு 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே...
தென்றலில் மிதந்து வரும்
மலரின் மனம் போல...
என்னில் உன்
மீதான காதல்...
பூத்து குலுங்குவதை
கண்டாயா...
பெண்ணே...
என் காதலின் மனம் கூட
நீ அறியவில்லையா...
துளிவிட்ட இலைகள்
உதிர்வதை கண்டு...
சோகம்
கொள்கிறாய்...
என்னில் உதித்த
என் காதல்...
உதிரபோவதை நீ
உணரவில்லையா...
என் உடலை விட்டு
உயிர் உதிரபோவதை...
முடிந்தால்
வந்து செல்...
என் மரண
ஊர்வலத்தில்.....