இறக்கை முளைத்த இளம் பட்டாம் பூச்சிகளாய்
எட்டாம் வகுப்பில்
மிதிவண்டி ஓட்ட
முதல் முறை உனை
பார்த்த பொழுது
மனம் ரயில்
வண்டியாய்......
தாமரை பூத்தபோது
அந்நாட்களில்
அவளைப் பார்த்த போது
வீட்டை எதிர்த்து
வேகமாய் அவளிடம்
வேதனையைச் சொல்ல
வழியில்லை நெஞ்சில்
அதனால் நாளும் காதல்
வலித் தொல்லை .....
நேரம் கிடைக்கும்
நேரங்களில் அவள்
நிலை பார்க்க
நிலா முகம் பார்க்க
நில்லாமல்
நித்தம் தேடி என் மனம்...
ஊர் விலகிச்
சென்ற போது
உள்ளம் கேட்டது
ஊமை
உன் காதல்
ஊரறிவது எப்போது....
பன்னாட்டு நிறுவனத்தில்
பணி
பணத்திற்கு குறைவில்லை
இனி
தாய் தந்தை நலம்
பேணி
காக்க நான் இங்கே
தனி.....
பெண் பார்க்கும்
படலப்
பேச்சு
பெற்றவர்களிடமிருந்து....
இப்பொழுது நான்
இருபத்து ஏழு வயது
இளைஞன்
இறைவன் அருளால்
இன்னும் மணமாகாமல்
இளம் சிட்டாய் அவள்....
அம்மா விரும்பிய முதல்
அரும்பு
அவள் கட்டாயத்திற்காக மனம்
அழப் பார்த்து
அம்மன் அருளால்
அமையவில்லை.....
அடுத்து என் மனதில்
அழகாய் ஒரு திட்டம்
அவள் வரன் பார்க்க
அம்மாவை
அனுப்பினேன்....
அம்மாவின்
அனுமதியோடு.....
அவள்
அனுமதிப்பாலோ
அவமதிப்பாலோ
அன்று முழுதும்
அம்மாவின்
அலை பேசி
அழைப்பு வரும் வரை
அனைய வில்லை மனம்.....
புகைப்படம் கேட்டாள்
புதுப் பெண்
புதுச் செய்தி அம்மாவிடமிருந்து
புரியவில்லை என் தலை கால்....
பறந்தேன் புகைப்படம் எடுக்க
மறந்தேன் உலகையே
வரைந்தேன் ஒரு மடல்
திறந்தே என் மனம் ....
இந்த முகம்
வந்த மடல் பார்த்து
அந்த முகம்
தந்த வெட்கம்
தந்தை சொன்ன
விந்தை நொடி
தந்த சுகம் புது
சந்த சுரம்.....
அன்று இரவே
அனுப்பினார் தந்தை
அவள்
அலைபேசி எண்ணை
அழைத்தேன்
அனைத்து தெய்வங்களையும்
அருகில் வேண்டி
அடித்தது மணி
எடுத்தது காதல் ராணி
உள்ளம் திறந்து
ஊமை என்னுள்
ஊறிய காதலை
உணர்த்திவிட்டேன்
என்னை அவள்
உள்ளம் புகுத்திவிட்டேன்....
ஒருதலைக் காதல்
ஒருங்கிணைந்து ஆனது
ஒரு உயிர்க்காதல்
இரு மனம்
இணைந்து காதலிக்கிறோம்
இப்போது
இல்லறத் துணையாய்
இறக்கை முளைத்த
இளம் பட்டாம் பூச்சிகளாய் ........