நம்பிக்கை வை நண்பா!

உன்னை நீயே நம்பு!
விலகிப்போகும் வம்பு!
எதிரே வந்தால் கம்பு!
எதிர்க்க வேண்டும் தெம்பு!

முதலில் பேசு அன்பு!
முடிவில் வெல்லும் பண்பு!
இடியே விழுக வந்தாலும்
உன் கைகள் தாங்கும் நம்பு!

பணிந்து போனால் பயந்தான்
பயில்வான் போல சிரிப்பான்!
தீதை எதிர்த்து ஜெயித்து
உன் வாழ்வை நிலைநிறுத்து!

நம்மை நம்பி பலபேர்
இங்கே இருக்கும் பொழுது
நாமே நம்மை நம்பாமல்
இருப்பது என்ன முறையோ!

வெல்லத்தானே பிறந்தோம்!
நம்பிக்கண்ணைத் திறந்தோம்!
நம்பிக்கையே வாழ்க்கை என்ற‌
நம்பிக்கையை வைப்போம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-13, 10:29 am)
பார்வை : 107

மேலே